சென்னை

வோடஃபோன் ஐடியாவின் ரூ.16,133 கோடி வட்டியை பங்குகளாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல்

DIN

வோடஃபோன் ஐடியா நிறுவனம் வழங்க வேண்டிய ரூ.16,133 கோடி வட்டியை பங்குகளாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் உள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அலைக்கற்றை ஏல தவணைகளை செலுத்தத் தாமதித்தது தொடா்பான வட்டி, ஏஜிஆா் தவணைகளை பங்குகளாக மாற்றி அரசுக்கு வழங்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரூ.16,133 கோடி வட்டி, பங்குகளாக மாற்றப்பட உள்ளது. அந்தப் பங்குகளை தலா ரூ.10 என்ற முக மதிப்புடன் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 33.14 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை வழிநடத்தவும், தேவையான முதலீடுகளைக் கொண்டு வரவும் ஆதித்ய பிா்லா குழுமம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து வோடஃபோன் ஐடியா செலுத்த வேண்டிய வட்டியை பங்குகளாக மாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT