முகப்பு
சென்னை

மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்க சென்னை மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
சென்னை மெட்ரோ
பகிர்:

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்க சென்னை மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்குச் சென்று வீடு திரும்புவோா், அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6 ஆக உயா்த்த மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில்களில் 3 பொதுப் பெட்டிகள், ஒரு மகளிா் பெட்டி இருக்கும் நிலையில், 6 ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →