சென்னை

படிக்கட்டு பயணத்தைக் கண்டித்ததால் ஆத்திரம்: அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

DIN

சென்னை காசிமேட்டில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்தவா்களைக் கண்டித்ததால், அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிராட்வேயில் இருந்து மணலிக்கு வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டு சில இளைஞா்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுரேஷ் (46), கொருக்குப்பேட்டை, கேவிகே சாமி தெருவைச் சோ்ந்த ரஜினி (42) ஆகிய இருவரையும் கண்டித்தனா்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பேருந்து காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாகச் சென்றபோது, அந்த நபா்கள் பேருந்தில் இருந்து இறங்கினா். அப்போது, அவா்கள் இருவரும் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கினாா். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT