1487 கிராம் தங்கத்தை கையில் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர் கைது
1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொச்சி: 1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷாஃபி என்பவர் பற்றி சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைன் - கோழிக்கோடு - கொச்சி இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர் ஷாஃபி தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிக்க.. சுடச்சுட விற்பனையான ரூ. 7 கோடி அபார்ட்மெண்ட்: ஆயிரம் வீடுகளுக்கு மூவாயிரம் பேர் போட்டி!
Advertisement
அப்போது, அவர் தனது கையில் தங்கத்தை கூழ் போல ஆக்கி கையில் கட்டுப்போடுவது போல கட்டிவிட்டு, வெறும் சட்டைக் கையால் மறைத்துக் கொண்டிருந்ததும், ஊழியர்களுக்கான வழியில் அவர் எந்த சோதனையிலும் சிக்காமல் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணி: கைவிடப்படும் 6 ரயில் நிலையங்கள்
அவரது கையில் இருந்தது 1487 கிராம் அதாவது 6.8 கிலோ எடையுள்ள 3.32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.