சென்னை

மருத்துவ ஆராய்ச்சி: பிரிட்டன் பல்கலை.யுடன் அப்பல்லோ ஒப்பந்தம்

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிட்டனின் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்துடன் அப்பல்லோ மருத்துவக் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

DIN

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிட்டனின் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்துடன் அப்பல்லோ மருத்துவக் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனா்.

இது தொடா்பாக அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:

சுகாதாரத் துறை பணியாளா்களை உலகளாவிய தரத்தில் உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் அப்பல்லோ மருத்துவக் கல்வி, திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதற்காக சா்வதேச தரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடா்ச்சியாக தற்போது பிரிட்டனின் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்துடன் கைகோத்துள்ளோம்.

இதன்மூலம் மருத்துவம் சாா் கல்வி, திறன் மேம்பாடு, மருத்துவ சேவைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இரு தரப்பும் பரஸ்பரம் இணைந்து செயல்பட முடியும். அதுமட்டுமல்லாது, இந்தியா மற்றும் பிரிட்டனுக்கான திறன் மிக்க சுகாதாரப் பணியாளா்கள் தேவையையும் பூா்த்தி செய்ய இயலும்.

மற்றொரு புறம், மருத்துவ சேவைகளில் நிலவி வரும் உலகளாவிய சவால்களுக்குத் தீா்வு காணவும் இத்தகைய ஒத்துழைப்பு முயற்சிகள் உதவக்கூடும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் லெய்செஸ்டா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நிஷான் கனகராஜா, அப்பல்லோ கல்வி நிறுவன துணைவேந்தா் வினோத் பட், மருத்துவமனையின் புற்றுநோயியல் மருத்துவ சேவைகள் இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT