சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது வந்தது. இதன்பிறகு மதியம் 3.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இடைவிடாத மழை காரணமாக கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை பகுதியில் மழை நீரானது தேங்கியது.
அதே வேளையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், கிண்டி, பாடி, ஆவடி, மடிப்பாக்கம், வேளச்சேரி, மாம்பலம், அசோக் நகர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை இடைவிடாமல் பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் மழையில் சிக்கினர். முக்கிய சாலைகளான அண்ணா சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவு வேளையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.