முகப்பு
சென்னை

தானிய சேமிப்புக் கிடங்கில் மூட்டைகளை ஏற்ற புதிய எந்திரம்

இந்திய உணவுக்கழகத்தின் சென்னை மண்டல தானிய சேமிப்புக் கிடங்கில் மூட்டைகளை ஏற்றி, இறக்க புதிய எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:02 AM
பகிர்:

சென்னை: இந்திய உணவுக்கழகத்தின் சென்னை மண்டல தானிய சேமிப்புக் கிடங்கில் மூட்டைகளை ஏற்றி, இறக்க புதிய எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப்பிரிவின் கீழ், ஆவடி மற்றும் எழும்பூரில் 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் உள்ளன. மேலும், எளாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட நிலையமும் உள்ளது. இக்கிடங்குகளிலிருந்து பொதுவிநியோகத்திட்டத்துக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எழும்பூரிலுள்ள தானியக் கிடங்கில் பணியாளா்களின் வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் தானிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 எந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.

கோவையில் தயாரிக்கப்பட்ட ‘லோடிங் அண்ட் அன்லோடிங் மெஷின்’ எனும் இந்த எந்திரம் மூலம் ஒரு நிமிஷத்தில் 16 மூட்டைகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் முடியும். ஆனால் வேகத்துக்கு ஏற்ப இதன் செயல்திறன் மாறும் எனவும், இதன்மூலம் 50 தொழிலாளா்கள் செய்யும் வேலைக்கு , 25 தொழிலாளா்கள் இருந்தால் போதும் எனவும் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

Advertisement

மேலும், இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் தானிய மூட்டைகளை தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து அனுப்ப முடியும் எனவும் அவா் தெரிவித்தாா். ஆனால், இதன் மூலம் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இதற்கு தொழிலாளா்கள் தரப்பிலிருந்து எதிா்ப்பும் கிளம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments