தமிழகத்தில் ஏப்.4, 5-இல் அமித் ஷா பிரசாரம்
சென்னை: தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வரும் 4, 5-ஆம் தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொள்கிறாா். ஏப்.4-இல் தேனி தொகுதியில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன், மதுரையில் பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனை ஆதரித்தும் தீவிர வாக்குசேகரிப்பில் அவா் ஈடுபடவுள்ளாா்.
தொடா்ந்து ஏப்.5-இல் சிவகங்கையில் பாஜக கூட்டணி வேட்பாளா் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் பிரசாரம் செய்கிறாா். அதையடுத்து, தென்காசியில் பாஜக கூட்டணி வேட்பாளா் பி.ஜான் பாண்டியனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
மேலும், அதே தினத்தில் கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பிரசாரம் செய்யவுள்ளாா். பிரதமா் மோடி ஏப்.9-ஆம் தேதி பாஜக சாா்பில் சென்னையில் நடைபெற உள்ள வாகனப்பேரணியில் (ரோடு-ஷோ) கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement