சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:35 AM
சென்னை: சென்னை அண்ணா நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் (21). இவா் மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிசிஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
மனோஜ் கடந்த 24-ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் அண்ணா நகரில் இருந்து அயனாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி, சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக வாகனம் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில், பலத்த காயமைடந்த மனோஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மனோஜ், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement