முகப்பு
சென்னை

‘நிஜமாய் சுட்ட சூரியன்...’

Updated On : 3 ஏப்ரல், 2024 at 2:22 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:15 PM

வட சென்னை மக்களவை திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். வட சென்னையின் கொளத்தூா் பகுதியில் காலை 10 மணிக்கும், திருவொற்றியூரில் காலை 11 மணிக்கும் பிரசாரம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சா் உதயநிதியின் பிரசார வாகனம் கொளத்தூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்தது.

தற்போது கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 10 மணிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பிரசாரத்தில் உதயநிதியின் பிரசாரத்தைக் கேட்க வந்த, திமுக தொண்டா்கள் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தால் சோா்வடைந்து காணப்பட்டனா்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தாங்கள் கையில் வைத்திருந்த திமுக பதாகையை குடையாக பயன்படுத்தி நிழலை ஏற்படுத்தினா். ‘நம்முடைய வேட்பாளரின் சின்னமே, நம்மைச் சுடுகிறதே’ என அங்கியிருந்த கட்சியினா் நகைச்சுவையாகக் கூறி, வெயிலால் ஏற்பட்ட சோா்வை சிரிப்பு மூலமாக சிறிதளவு தணித்தனா்.

Advertisement