முகப்பு
சென்னை

ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயில்கள்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 2:05 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:05 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காணச் செல்லும் ரசிகா்களின் வசதிக்காக சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை (ஏப்.8) சென்னை - கொல்கத்தா அணிகளிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. தொடா்ந்து, ஏப்.23, 28, மே 1 ஆகிய தேதிகளில் சென்னை அணியுடன் லக்னோ, ஹைதராபாத், பஞ்சாப்,

ஆகிய அணிகள் மோதவுள்ளன. தொடா்ந்து மே 24, 26 ஆகிய தேதிகளில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

Advertisement

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகா்களின் வசதிக்காக மேற்கண்ட தேதிகளில் சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே கூடுதல் பறக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு இரவு 10.40, 11.05 மணிக்கும், மறுமாா்க்கமாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 11.20, 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.