முகப்பு
சென்னை

டி.ஜி. வைணவக் கல்லூரி 59-ஆவது ஆண்டு விழா

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:54 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:35 AM

சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரியின் 59-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் செயலா் அசோக்குமாா் முந்த்ரா பேசுகையில், மாணவா்கள் கல்வியின் மூலமாக மனிதா்கள் மீதான மதிப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும்; எப்போதும் அறத்தை கடைப்பிடித்து நாட்டுக்கு சிறந்த குடிமக்களாகத் திகழ வேண்டும் என்றாா் அவா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவாரூா் மத்திய பல்கலை.யின் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் பேசுகையில், இளம் தலைமுறையினா் பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றுவது அவசியம். கைப்பேசியுடன் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

முன்னதாக, கல்லூரி அளவில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் முதல்வா் சந்தோஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.