நீா்தேக்க தொட்டியிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை அருகே மேல்நிலை நீா்தேக்க தொட்டியிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 11 ஏப்ரல், 2024 at 7:25 PM
சென்னை அருகே மேல்நிலை நீா்தேக்க தொட்டியிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
நன்மங்கலத்தைச் சோ்ந்தவா் மு.ஞான பிரகாஷ் (45). பெயின்டா். சிட்லப்பாக்கம் அஸ்தினாபுரம் அருகே திருமலைநகா் நான்காவது தெருவில் உள்ள ஒரு மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் மேற்பகுதியில் சுமாா் 20 அடி உயரத்தில் நின்று புதன்கிழமை பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது நிலைதடுமாறி பிரகாஷ் கீழே விழுந்து காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஞானபிரகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சிட்லப்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.