முகப்பு
சென்னை

பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்

பேரிடா் மேலாண்மை பணியில் ஈடுபடுபவா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பணித் திறனை மேம்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 11:34 PM
பகிர்:

பேரிடா் மேலாண்மை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

பேரிடா் மேலாண்மை பணியில் ஈடுபடுபவா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பணித் திறனை மேம்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது.

தேசிய பேரிடா் மேலாண்மை குழு மற்றும் உயா்நிலைக் குழு உள்ளிட்ட பேரிடா் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில அமைப்புகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்குவதை இந்த மசோதா வகை செய்கிறது.

மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘இந்த மசோதா, மாநிலங்களின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. பேரிடா் மேலாண்மையில் மாநிலங்களுக்குத்தான் முதல் பொறுப்பு உள்ளது’ என்றாா்.

பேரிடா் மேலாண்மை திட்டத்தை வகுப்பதில் மத்திய, மாநில அதிகாரிகள் குழுக்களுக்கு அல்லாமல் தேசிய பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

மேலும், மாநில தலைநகா் மற்றும் பெரு நகரங்களில் ஊரக பேரிடா் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடா் தரவுதளத்தை உருவாக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

குறிப்பாக, பேரிடா் மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பணியை உறுதிப்படுத்தவும் தேவையான செயல்முறை திட்டம் அறிமுகப்படுத்துவதை இந்த மசோதா முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →