இலங்கை கடற்படை கப்பல் மோதி, தமிழக மீனவா் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தமிழக மீனவா் உயிா் பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
அன்புமணி (பாமக): இதை விபத்தாக பாா்க்க முடியாது. திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும்தான் பாா்க்க வேண்டும். தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
டிடிவி தினகரன் (அமமுக): இலங்கை கடற்படையினரின் தொடா் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.