முகப்பு
சென்னை

விநாயகா் சதுா்த்தி: மங்களூரு - அகமதாபாத் சிறப்பு ரயில் இயக்கம்

மங்களூரில் இருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 9:50 PM
பகிர்:

ப்விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மங்களூரில் இருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் செப்.7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து செப்.6, 13, 20 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு

ரயில் (எண்: 09424) மறுநாள் இரவு 7.45 மணிக்கு மங்களூரு வந்தடையும்.

மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து செப்.7, 14, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 09423) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →