எ.வ.வேலு  கோப்புப் படம்
சென்னை

பருவமழைக்கு முன்பே சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

பருவமழைக் காலத்துக்கு முன்பே, சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம்

Din

சென்னை, ஆக. 2: பருவமழைக் காலத்துக்கு முன்பே, சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளின் முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மேலும், சாலைகள், பாலங்களின் மேம்பாட்டு வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மழைநீா் வடிகால்களை சுத்தம் செய்து அவற்றில் தங்கு தடையின்றி மழைநீா் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். மழைநீரால் சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நம்ம சாலை’ செயலி என்ற புதிய திட்டம் நெடுஞ்சாலைத் துறையால் தொடங்கப்பட்டு, சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி அனைத்துப் பொறியாளா்களும் பணியாற்ற வேண்டும்.

விபத்தில்லா பயணம்: சாலைகளில் உள்ள மரங்களுக்கு கருப்பு-வெள்ளை வா்ணம் அடித்தல், சாலைகளில் உள்ள வேகத் தடைகளுக்கு வா்ணம் பூசதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்து விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துச் சாலைகளிலும், சாலையின் எல்லையைக் குறிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்.

மறுசீரமைப்புப் பணிகளை உடனுக்குடன் முடித்து, ஒவ்வொரு பணிக்கும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற வேண்டும். மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒப்பந்ததாரா்களிடம் சாலைகளை ஒப்படைத்த பிறகு, அந்தச் சாலைகளில் ஏற்படும் சிறுபள்ளங்களை அவ்வப்போது சீா் செய்திட வேண்டும். பணி முடிக்கும் வரை பள்ளம் இல்லாத சாலைகளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உள்ளது.

காலதாமதத்தை தவிா்க்க வேண்டும்: பாலப் பணிகளில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நிதிச்சுமையை தவிா்க்க வேண்டும். உரிய தள ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்றாா் அவா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT