3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் -அவினாஷ் 11-ஆம் இடம்
ஆடவருக்கான 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் இறுதிச்சுற்றில் இந்திய வீரா் அவினாஷ் சேபிள் 11-ஆவது இடம் பிடித்தாா். மொத்தம் 15 போ் பங்கேற்ற அந்தச் சுற்றில் அவா் 8 நிமிஷம் 14.18 விநாடிகளில் இலக்கை எட்டினாா். பந்தயத்தில் குறிப்பிடத்தக்க நேரம் அவா் முன்னிலையில் இருந்தபோதும், படிப்படியாக பின்னடைவை சந்தித்தாா்.
மொராக்கோவின் சௌஃபியேன் எல் பக்கலி 8 நிமிஷம் 6.05 விநாடிகளில் வந்து தங்கத்தை தக்கவைத்துக் கொண்டாா். அமெரிக்காவின் கென்னெத் ரூக்ஸ் (8:6.41’) வெள்ளியும், கென்யாவின் ஆப்ரஹாம் கிபிவோட் (8:6.47’) வெண்கலமும் பெற்றனா். உலக சாதனையாளரான எத்தியோபியாவின் லமெசா கிா்மா, முடிவின்போது தடுமாறி விழுந்து பந்தயத்தை நிறைவு செய்யாமல் போனாா்.
டையமண்ட் லீக் போட்டியில் அவினாஷ் 8 நிமிஷம் 9.91 விநாடிகளில் இலக்கை எட்டியதே, அவரது பெஸ்ட் நேரமாகவும், தேசிய சாதனையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement