முகப்பு
சென்னை

ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக பேரவைத் தோ்தல்: தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்கள் தோ்தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 4:09 AM
ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு.
பகிர்:
Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 9:25 PM

ஸ்ரீநகா், ஆக. 8: ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்கள் தோ்தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் பெறவும் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா் வந்தது.

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), ஜம்மு-காஷ்மீா் பாந்தா்ஸ் கட்சி (ஜேகேபிபி), மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் சா்வதேச மாநாட்டு மையத்தில் சந்தித்து தோ்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்தியது.

Advertisement

அப்போது, ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் ஒருமனதாக இருப்பதாக அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தெரிவித்தனா்.

தோ்தல் குழுவின் பிரதிநிதிகளுடன் கட்சிவாரியான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அரசியல் கட்சித் தலைவா்கள், ‘ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க, தோ்தலில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். செப்டம்பா் 30-ம் தேதிக்குள் தோ்தலை நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தோ்தல் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தனா்.

தேசிய மாநாடு கட்சித் தலைவா் நசீா் அஸ்லாம் வானி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறாா்கள். ஜம்மு-காஷ்மீரை ஒரு துணை நிலை ஆளுநா் மற்றும் சில அரசு அதிகாரிகளைக் கொண்டு இயக்க முடியாது என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜி என் மோங்கா கூறுகையில், ‘இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கிறோம். ஆனால், ஜம்மு-காஷ்மீா் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களுக்கான பிரதிநிதிகளை தோ்தல் மூலம் தோ்வு செய்ய முடியாமல் உள்ளனா்’ என்றாா்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 3:14 AM

மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளா் குா்ஷித் ஆலம் கூறியதாவது: அமா்நாத் யாத்ரீகா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு கோடி போ் வந்தபோதும், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறி வரும்போதும், மக்களவைத் தோ்தல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தபோதும், சட்டப்பேரவைத் தோ்தல் மட்டும் நடத்தாமல் இருப்பது என்ன நியாயம்’ எனக் கேள்வி எழுப்பினாா்.