சென்னை

மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.9) நிறைவடைகிறது.

Din

சென்னை, ஆக. 8: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.9) நிறைவடைகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்களைப் பொருத்தவரை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 3,400 இடங்களும், 3 மாநில தனியாா் பல்கலைக்கழகங்களில் 450 இடங்கள் என மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

அதேபோன்று, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 பிடிஎஸ் இடங்கள், 20 தனியாா் பல் மருத்துவ கல்லூரிகளில் 1,950 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் (851 எம்பிபிஎஸ், 38 பிடிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. மீதமுள்ள 50 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற்/, ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கியது.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா். இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.9) நிறைவடைகிறது. இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆக.9) மற்றும் ஆக.12-ஆம் தேதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் 19-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆக.21 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT