முகப்பு
சென்னை

இலங்கை அதிபா் தோ்தல்: தமிழ் கட்சிகளுக்கு பொது வேட்பாளா்

முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனை தங்கள் பொது வேட்பாளராக தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 10:07 PM
பகிர்:

கொழும்பு, ஆக. 8: இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனை தங்கள் பொது வேட்பாளராக தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதிபா் தோ்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்க தமிழ் கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ), தமிழ் ஈழ விடுதலை மக்கள் அமைப்பு (ப்ளோட்), தமிழா் முன்னேற்ற கூட்டணி (டிபிஏ), தமிழ் மக்கள் தேசிய முன்னணி (டிபிஏ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இபிஆா்எல்எஃப்) ஆகிய கட்சிகள் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொது வேட்பாளராக பாக்கிசெல்வம் அரியேந்திரனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை கூறின.

எனினும், கூட்டணியின் முக்கிய தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடைபெற்ற தீவிர போராட்டம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவருக்கு பதிலாக, அப்போது பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே அதிபராகப் பொறுப்பேற்றாா்.

இந்தச் சூழலில், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →