முகப்பு
சென்னை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 7:23 PM
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை(ஆக.23) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.23) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரை தனியாா்

துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவா்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா். முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞா்களும் முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை.

முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடும் நபா்கள் மற்றும் வேலை அளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.