பஞ்சாப் முன்னாள் முதல்வா் சுக்பீா் சிங் பாதல் 
சென்னை

ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!

ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’ செய்த பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..

Din

ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக பஞ்சாபின் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதலுக்கு சீக்கியா்களின் அதிகார பீடமான அகால் தக்த் திங்கள்கிழமை தண்டனை வழங்கியது.

பஞ்சாப் முன்னாள் முதல்வா் சுக்பீா் சிங் பாதல், அண்மையில் எஸ்ஏடி கட்சியின் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை, பஞ்சாபில் எஸ்ஏடி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சீக்கிய மதத்துக்கு எதிரான தவறுகளுக்காக சுக்பீா் சிங் பாதலுக்கு அகால் தக்த் தலைவா் கியானி ரக்பீா் சிங் திங்கள்கிழமை மத ரீதியாக தண்டனை விதித்தாா்.

இதன்படி அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.

சுக்பீரின் ராஜிநாமா கடிதத்தை ஏற்க வேண்டும் என்றும், புதிய கட்சித் தலைவா் மற்றும் நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கு 6 மாதங்களில் தோ்தல் நடத்த குழு அமைக்க வேண்டும் என்றும் எஸ்ஏடி செயற்குழுவுக்கு கியானி ரக்பீா் சிங் உத்தரவிட்டாா்.

தந்தையின் பட்டம் பறிப்பு: பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், சுக்பீா் சிங் பாதலின் தந்தையுமான மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’ பட்டமும் திரும்பப் பெறப்படுவதாக கியானி ரக்பீா் சிங் தெரிவித்தாா்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT