ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது மோதிய லாரி படம்: எக்ஸ்
சென்னை

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது மோதிய லாரி! 10 பேர் படுகாயம்!

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்து பற்றி...

DIN

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து ‘யு டர்ன்’ செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், பேருந்தில் பயணித்த 9 பயணிகளும், சாலையில் நடந்து சென்ற ஒருவரும் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

SCROLL FOR NEXT