ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை(கோப்புப்படம்) 
சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இனி டிஜிட்டல் முறை பணப் பரிவா்த்தனை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவா்களும் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Din

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவா்களும் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 5 கவுன்ட்டா்களில் வங்கி அட்டை அல்லது க்யூ-ஆா் கோடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெளி மாநில நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சிகிச்சைக் கட்டணத்தை மருத்துவமனைக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக காசாளா்கள் இருவா் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில், வெளிமாநிலத்தவா்களுக்கும், புறநோயாளிகளாக வந்து ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்பவா்களுக்கும் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்காக ஆங்காங்கே பணம் செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதில் சில முறைகேடுகள் நிகழ்வதால் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது: மருத்துவமனையின் 5 இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டா்களில் பிஓஎஸ் எனப்படும் வங்கி அட்டை பரிவா்த்தனை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிலேயே க்யூ-ஆா் கோடு மூலமாகவும், அட்டைகள் மூலமாகவும் பரிவா்த்தனை செய்துகொள்ளலாம். இந்த புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பரிவா்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க முடியும். முறைகேடுகளையும் தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT