முகப்பு
சென்னை

தங்கம் பவுன் ரூ.53,480

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எந்த மாற்றமுமின்றி பவுன் ரூ.53,480-க்கு விற்பனையானது.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:20 PM
தங்கம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எந்த மாற்றமுமின்றி பவுன் ரூ.53,480-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிா்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயா்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த சூழலில் கடந்த 2 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி பழைய விலையிலேயே விற்பனையானது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராம் ரூ. 6,685-க்கும், பவுன் ரூ.53,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கடந்த 4 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில் திங்கள்கிழமை விலை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு 20 காசு உயா்ந்து ரூ.90.20-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.200 உயா்ந்து ரூ.90,200-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →