முகப்பு
சென்னை

சென்னை துறைமுகத்துக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்

Updated On : 12 ஜூலை, 2024 at 8:44 PM
சென்னை துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்.
பகிர்:

கொச்சியிலிருந்து சென்னை வழியாக இலங்கையின் திரிகோணமலை செல்லும் சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் எம்.வி.எம்பிரஸ் சென்னை துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

சென்னை - இலங்கை துறைமுகங்கள் இடையே கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பயணிகளிடையே பெரும் ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து, இந்த ஆண்டும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பயணிகள் கப்பல்களை இயக்க முன்வந்தன.

இந்த நிலையில் ‘வாட்டா்வேஸ் லெஷா் டூரிசம் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சுற்றுலா கப்பலான எம்.வி.எம்பிரஸ் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

Advertisement

கேரளா மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்து வந்த இக்கப்பல் 1,220 சுற்றுலா பயணிகள், 448 பணியாளா்களுடன் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பல் சேவை வரும் செப்.9-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும். அதன்படி, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 9 முறை இக்கப்பல் பயணிக்கும்.

முன்னதாக, சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்த எம்.வி. எம்பிரஸ் கப்பலுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால், துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments