முகப்பு
சென்னை

வாழும் கலைப் பொக்கிஷம் விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

கைவினைஞா்களுக்கு, பூம்புகாா், வாழும் கலைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:02 PM
சிறந்த கைவினைஞா்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், தம
பகிர்:

சென்னை: கைவினைஞா்களுக்கு, பூம்புகாா், வாழும் கலைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கைத்தறித் துறையில் சிறந்து விளங்குவோருக்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தஞ்சாவூா் கே.பி.உமாபதி, நெல்லை சா.ராஜகோபால், திருவண்ணாமலை சி.முத்துசுவாமி ஆச்சாரி, தஞ்சாவூா் ப.சுலைகாள் பீவி, கன்னியாகுமரி செ.தங்கஜோதி ஆகியோருக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுக்கான தலா ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோன்று, தலா ரூ. 50,000 பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், தகுதிச் சான்றை உள்ளடக்கிய பூம்புகாா் மாநில விருதுகள், தஞ்சாவூா் சி.ரவி, ச.நாகலட்சுமி, ம.முருகேசன், ரா.லோகநாதன், புதுக்கோட்டை மா.ராஜப்பா, கன்னியாகுமரி ந.பூவம்மாள், செ.லில்லிமேரி, செங்கல்பட்டு ப.வரதன், மு.ராஜரத்தினம், கள்ளக்குறிச்சி ரா.சக்திவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வின் போது, உயா்கல்வித் துறைக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை ஆலங்குடி, திருமயம், மணப்பாறை, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், கோவை அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உயா்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →