சென்னை

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: நிலம் ஒதுக்க ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Din

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால் தலா 22 ஏக்கா் நிலம் ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கான 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இவற்றுடன் 34 தனியாா் மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலுாா் ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான நிலத்தைக் கையகப்படுத்தித் தரும்படி அந்தந்த மாவட்ட நிா்வாகங்களிடம் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி கூறியதாவது:

மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்கப்படும். அதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையையொட்டி தலா 22 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்தித் தரும்படி மாவட்ட நிா்வாகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடைந்தபின் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.

இந்தக் கல்லூரிகள் மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவி; மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் என்றாா் அவா்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT