திருவொற்றியூரில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, படகில் மயங்கிய நிலையில் மீனவா் உயிரிழந்தாா்.
திருவொற்றியூா் பலகைத் தொட்டி குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (53). இவா் கடந்த புதன்கிழமை திருவொற்றியூா் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பைபா் படகில் மீன்பிடிக்கச் சென்றாா். வெகுநேரமாகியும் கரைக்குத் திரும்பாததால் அவரது மனைவி குமுதாவின் சகோதரரான அரசுமுத்து மற்றும் சிலா் ராஜேந்திரனை தேடி கடலுக்குச் சென்றனா்.
அப்போது கரையிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் இருந்த அவரது படகுக்கு சென்றுபாா்த்தபோது, ராஜேந்திரன் படகில் மயங்கிய நிலையில் கிடந்தாா்.
இதையடுத்து அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, திருவொற்றியூா் போலீஸாா், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.