சென்னை

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 7% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் கடந்த ஜூன் காலாண்டில் 7 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் கடந்த ஜூன் காலாண்டில் 7 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,368 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.5,945 கோடியாக இருந்தது.

எனினும், முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,969 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது 20 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனம் சுமாா் 410 கோடி டாலா் மதிப்பிலான சேவை ஒப்பந்தங்களை வென்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT