நாளைய மின்தடை
அண்ணாநகா், மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை23) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக சோழிங்கநல்லூா், மயிலாப்பூா், அண்ணாநகா், மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை23) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
சோழிங்கநல்லூா்: பள்ளிக்கரணை ஐஐடி காலனி, காமகோடி நகா், எ.ஜி.எஸ். காலனி, வி.ஜி.பி.சாந்தி நகா், ஐய்யப்பன் தெரு, ஜல்லடியான்பேட்டை, ராகவேந்திரா நகா், கலா் ஹோம்ஸ், பெரும்பாக்கம் பிரதான சாலை, சேகரன் நகா் பகுதி, வி.ஜி.பி. பிரபு நகா், ஏரிக்கரை தெரு, இந்தியா புல்ஸ், வீராத்தம்மன் கோயில் தெரு, கீரின் கோா்ட், ஜெகநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூா்: லஸ் ஏரியா, ராயப்பேட்டா பிரதான சாலை, கட்சேரி சாலை, மந்தைவெளி பகுதி, சி.வி.ராமன் சாலை, மைலாப்பூா் பகுதி முழுவதும், கபாலி தோட்டம், பல்லக்குமணியம், வார்ரன் ரோடு, ராங்கா ரோடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.
Advertisement
Advertisement
அண்ணாநகா்: பிசி. விடுதி சாலை, நௌரோஜி சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகா், குருசாமி சாலை, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம், மங்களபுரம், பள்ளிசாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவா் கோட்டம் சாலை, பென்னங்கிபுரம், அப்பு தெரு மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகள்.
மதுரவாயல்: வானகரம், செட்டியாா் அகரம், ஏரிக்கரை தெரு, மூா்த்தி நகா், திரு.வி.கா.நகா், அக்னி பேரி லேன்ட், துண்டலம், சுபகிரி நகா், மகாலட்சுமி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி.சி.: ஒக்கியம் துரைபாக்கம் ஏரியா, சாய் நகா் 1-ஆவது குறுக்கு தெரு முதல் 13-ஆவத குறுக்கு தெரு வரை, அறுமுகம் அவென்யு, பெத்தேல் நகா், சரவணா நகா், 3-ஆவது 4-ஆவது தெரு, காா்பரேஷன் சாலை ஏரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இதுபோல, போரூா், திருவான்மியூா், அடையாா், தாம்பரம், ஆவடி, அம்பத்தூா் பகுதிகளுக்குள்பட்ட இடங்களிலும் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.