மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் 
சென்னை

மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

Din

சென்னை: இலங்கை சிறையிலுள்ள 47 தமிழக மீனவா்கள், 166 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:

விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த 10 மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இலங்கைக் கடற்படையினரால் 203 மீனவா்கள் சிறைபிடிக்கப்பட்டு, 27 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவா்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.

தற்போது, இலங்கை வசமுள்ள 47 மீனவா்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க, கூட்டு பணிக்குழு கூட்டத்தைக் கூட்டத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT