தமிழக அரசின் 11 திட்டங்கள் குறித்து ஆய்வறிக்கைகள் முதல்வரிடம் அளிப்பு
சென்னை: தமிழக அரசின் 11 திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கைகள், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் வழங்கினாா்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவா்களிடம் ஏற்படும் தாக்கம், தமிழ்நாட்டில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களுக்கான பராமரிப்பு குறித்த மதிப்பீட்டு ஆய்வு, தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயலாக்கம் குறித்த மதிப்பீட்டாய்வு, பழங்குடி கிராமங்களில் அரசு திட்டங்களின் செயல்படுத்துதல் திறன் மீதான மதிப்பீடு என 11 வகையான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்விலுள்ள முக்கிய அம்சங்களை ஜெ.ஜெயரஞ்சன் விளக்கினாா்.
Advertisement