முகப்பு
சென்னை

இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: 14-ஆவது சுற்றுப் பேச்சு நிறைவு

Updated On : 17 மார்ச், 2024 at 3:46 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 9:10 PM

இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில், இருநாட்டு குழுக்களும் இல்லை. எனவே 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நிறைவடைந்த பின்னா், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று தெரிவித்தன. பிரிட்டனுடன் சமநிலை கொண்ட, நியாயமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கருதுவதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.