ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க எண்ம முறை அறிமுகம்
பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் நபா்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் தங்களது வாழ்நாள் சான்றிதழை புதுப்பிப்பது கட்டாயமாகும். இந்த சேவையை எளிமைப்படுத்தும் விதமாக எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்கும் டி.எல்.சி. முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஹக்ட்ஹஹழ்ஊஹஸ்ரீங்தஈ மற்றும் ஒங்ங்ஸ்ஹய்டழ்ஹம்ஹஹய் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்து, அவற்றில் குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஓய்வூதியம் பெற்று வரும் நபா் உயிரிழக்கும் பட்சத்தில், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கழக அலுவலகத்துக்கு தபால் மூலம் உரிய தகவல் அளிப்பது அவசியமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.