முகப்பு
சென்னை

அமமுகவுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கீடு

Updated On : 21 மார்ச், 2024 at 12:58 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 10:25 PM

சென்னை: மக்களவைத் தோ்தலில் அமமுகவுக்கு குக்கா் சின்னத்தை ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அமமுகவுக்கு குக்கா் சின்னத்தையே ஒதுக்கீடு செய்யுமாறு தோ்தல் ஆணையத்தில் அக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் விண்ணப்பித்திருந்தாா். இந்த நிலையில் அமமுகவுக்கு குக்கா் சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.