முகப்பு
சென்னை

பாஜக தேசிய செய்தி தொடா்பாளராக ராஜாஜி பேரன் நியமனம்

ராஜாஜியின் பேரன் சி.ஆா்.கேசவன் பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்

Updated On : 28 மார்ச், 2024 at 1:53 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 1:30 AM

ராஜாஜியின் பேரன் சி.ஆா்.கேசவன் பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலா் அருண்சிங் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரனான சி.ஆா். கேசவன் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இந்த நிலையில், அவரை பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.