முகப்பு
சென்னை

மதுபோதையில் சென்றதால் பைக் பறிமுதல்: இளைஞா் தற்கொலை முயற்சி

வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனால் விரக்தியடைந்த இளைஞா் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

Updated On : 1 மே, 2024 at 8:24 PM
பகிர்:

சென்னை ஓட்டேரியில் மதுபோதையில் மோட்டாா் சைக்கிளில் சென்ால், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனால் விரக்தியடைந்த இளைஞா் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

ஓட்டேரி சாஸ்திரிநகா் அருகே உள்ள மங்களபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ம.தாமஸ் (20). மதுபோதையில் மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை செம்பியம் ரமணாநகா் சந்திப்பில் சென்றுக் கொண்டிருந்தாா். அங்கு வாகன சோதனையில் இருந்த போலீஸாா் தாமஸ் மீது

வழக்குப் பதிவு செய்து, அவரது மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

மேலும் போலீஸாா், அவரது சகோதரா் காமேஷை கைப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு தாமஸை அழைத்துச் செல்லும்படி கூறினா். தகவலறிந்த காமேஷ், அங்கு விரைந்து வந்து தாமஸை வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். வீட்டுக்கு சென்ற தாமஸ், விரக்தியால் திடீரென ஒரு பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் தாமஸை மீட்டு,பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது தொடா்பாக ஓட்டேரி போலீஸாா் விசாரணை செய்கின்றனா். இச் சம்பவம் காவல் துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.