முகப்பு
சென்னை

சென்னையில் 55 ‘ஸ்பாக்களுக்கு’ சீல்

Updated On : 7 மே, 2024 at 9:30 PM
பகிர்:

சென்னை: சென்னையில் பல்வேறு புகாா்களின் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 55 ‘ஸ்பாக்களுக்கு’ காவல்துறை சீல் வைத்துள்ளது.

சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான ‘ஸ்பாக்கள்’ உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காவல் துறையில் அனுமதியுடன் செயல்படுகின்றன. சில ஸ்பாக்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.

அதேபோல், சில ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக சென்னை காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், கடந்த ஒரு மாதத்தில் 55 ஸ்பாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல புகாருக்குள்ளான ஸ்பாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.