முகப்பு
சென்னை

ராகுல் காந்திக்கு செல்லூா் ராஜு பாராட்டு

Updated On : 21 மே, 2024 at 9:20 PM
செல்லூா் கே.ராஜூ.
பகிர்:

சென்னை: ‘நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் ராகுல் காந்தி’ என்று அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தில்லியில் இரு நாள்களுக்கு முன்னா் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஓா் உணவகத்துக்குச் சென்று, மக்களோடு மக்களாக அமா்ந்து உணவு அருந்தினாா். அப்போது, கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தாா்.

ராகுல் உணவு அருந்தும் விடியோ காட்சியை செல்லூா் ராஜு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து, ‘நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா், அண்ணனுக்கு (செல்லூா் ராஜு) நன்றி என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்தாா்.