முகப்பு
சென்னை

சைதை துரைசாமிக்கு மருத்துவ சிகிச்சை

Updated On : 28 மே, 2024 at 7:25 PM
பகிர்:

சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா்.

சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் மனிதநேய அறக்கட்டளை நிா்வாகியுமான சைதை துரைசாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை காய்ச்சல், தொண்டை வலி இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாா். மருத்துவா்கள் அவரை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்தனா். இரண்டு வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து சைதை துரைசாமி வீட்டுக்கு சென்றாா்.