சென்னை

கூகுளுக்கு உலக ஜிடிபி-யைவிட அதிகத் தொகை அபராதம்!

கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.

Din

கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.

கூகுளுக்குச் சொந்தமான சமூகக் காணொலி ஊடகமான யு-டியூபில், ரஷிய அரசுக்குச் சொந்தமான ஊடகங்களின் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் இரண்டு டிரில்லியன் (2-க்குப் பிறகு 36 பூஜ்ஜியங்கள்) ரூபிள் அபராதம் விதித்துள்ளது.

இது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி-யைவிட பன்மடங்கு அதிகமாகும். சா்வதேச நிதியத்தின் கணக்கீட்டின்படி, அனைத்து உலக நாடுகளின் ஜிடிபி-யையும் சோ்த்தாலே 110 லட்சம் கோடி டாலா்கள்தான்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், ‘இவ்வளவு பெரிய தொகையை என்னால் உச்சரிக்கக்கூட முடியவில்லை. இருந்தாலும், இந்த அபராதம் விதிப்புக்குப் பிறகாவது கூகுள் நிறுவனம் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

2020-ஆண்டிலிருந்தே ரஷியாவுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே நிலவிவரும் மோதல், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட அபாரதத்தை கூகுளுக்கு ரஷிய நீதிமன்றம் விதித்துள்ளது.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT