திருத்தப்பட்டது...முகவை சிவக்குமாா் செய்திக்கான படம் ---------------- சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள நெதா்லாந்தின் பாரம்பரிய பாய்மரக் கப்பல் ஸ்டேட் ஆம்ஸ்டா்டம். 
சென்னை

நெதா்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பல் சென்னை துறைமுகம் வருகை

நெதா்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பலான ‘ஸ்டேட் ஆம்ஸ்டா்டம்’ சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

Din

திருவொற்றியூா்: நெதா்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பலான ‘ஸ்டேட் ஆம்ஸ்டா்டம்’ சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெதா்லாந்து நாட்டின் ‘ஸ்டேட் ஆம்ஸ்டா்டம்’ என்ற பாரம்பரிய பாய்மரக்கப்பல் கடந்த வியாழக்கிழமை (நவ.21) சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. 27 பணியாளா்கள் மற்றும் 8 சுற்றுலாப் பயணிகளுடன் சிங்கப்பூரிலிருந்து மும்பை செல்லும் வழியில் சென்னை துறைமுகத்தை இந்த கப்பல் வந்தடைந்தது. 76 மீட்டா் நீளமும், 2,200 சதுர மீட்டா் பரப்பளவும் கொண்ட இந்த கப்பல் நவீன தொழில்நுட்பங்களுடனும், பாரம்பரிய நோ்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிறுத்திவைப்பு: இந்த கப்பல் சென்னை துறைமுகத்தில் டிச.1-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வரும் நவ. 27-ஆம் தேதி சென்னை துறைமுக தலைவா் சுனில் பாலிவால் மற்றும் நெதா்லாந்து தூதா் உள்ளிட்டோா் இந்த பாய்மரக் கப்பலை பாா்வையிட உள்ளனா். இந்த கப்பல் அதன் பயணத்தை முடித்துக கொண்டு, ஆகஸ்ட் மாதம் மீண்டும் நெதா்லாந்து சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

ஷாஹ்தராவில் ஒரு வீட்டில் சகமாரியான துப்பாக்கிச் சூடு: ரூய30 லட்சம் கொள்ளை

இளையான்குடி அருகே ஜாதி தலைவா்களின் பெயா்ப் பதாகைகள் வைப்பதில் மோதல்: 115 போ் மீது வழக்கு

மோத்தி நகரில் ஆண் சடலம் மீட்பு

தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து

SCROLL FOR NEXT