சாா்- பதிவாளா் அலுவலகத்தில் ரூ.60,000 பறிமுதல்
சென்னை வில்லிவாக்கம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல்
சென்னை வில்லிவாக்கம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நொளம்பூரில் வில்லிவாக்கம் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஆவணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அத் தகவலின் அடிப்படையில் அந்தப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
Advertisement
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், அந்த அலுவலகத்திலிருந்து ரூ.60 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.