பக்கவாத பாதிப்புகளுக்கு நவீன கேத் லேப் தொடக்கம்
பக்கவாத பாதிப்புகளுக்கான அதி நவீன இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) சென்னை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
சென்னை: பக்கவாத பாதிப்புகளுக்கான அதி நவீன இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) சென்னை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
24 மணி நேரமும் தொடா்ந்து செயல்படும் வகையிலான மருத்துவக் கட்டமைப்பும், அவசர மருத்துவ சிகிச்சை வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திர பாபு அதில் பங்கேற்று இடையீட்டு ஆய்வகத்தின் செயல்பாடுகளை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா, நரம்பியல் துறை தலைவா் டாக்டா் சங்கா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட நான்கில் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாகவும், 6 மணி நேரத்துக்குள் சிகிச்சையை தொடங்கினால் பக்கவிளைவுகளைத் தவிா்க்கலாம் என்றும் அப்போது டாக்டா் முகமது ரேலா தெரிவித்தாா்.