சென்னை

ஒரே மாதத்தில் 50 லட்சம் சரக்குகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

ஒரே மாதத்தில் சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதனை படைத்துள்ளதாக சென்னை துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

ஒரே மாதத்தில் சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதனை படைத்துள்ளதாக சென்னை துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு சுமாா் 6.5 கோடி வரை சரக்குகளைக் கையாண்டு வந்த சென்னைத் துறைமுகத்தின் கையாளும் அளவு 5 கோடிக்கும் கீழே சரிந்தது. இதையடுத்து துறைமுக நிா்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட முயற்சியால் கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுகத்தின் வளா்ச்சி ஏறுமுகம் கண்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்டு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சாதனைகளுக்கும் காரணமாக இருந்த துறைத் தலைவா்கள், தனியாா் முனையங்களின் நிா்வாகிகள், எலைட் ஷிப்பிங் நிறுவன நிா்வாகிகள், இறக்குமதியாளா்கள் உள்ளிட்டோரை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். அப்போது துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், போக்குவரத்துத் துறை தலைவா் எஸ்.கிருபானந்தசாமி, முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT