சென்னை புறநகர் ரயில்கள் 
சென்னை

சென்னை புறநகரில் இன்றிலிருந்து 3 நாள்கள் 17 ரயில்கள் ரத்து

சென்னை புறநகரில் இன்றும் 16, 17 தேதிகளில் 17 ரயில்கள் ரத்து

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை (ஆக. 14) மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மூா் மாா்க்கெட் காம்ப்ளக்சிலருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்கள், காலை 1.30, 11.35 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், சூலூா் பேட்டையிலருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூா், பிற்பகல் 1.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி, 3.10, இரவு 1 மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரை, பிற்பகல் 12, 2.30, 3.15, மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதியளவு ரத்து: செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரையிலும் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்: வரும் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட்டிலிருந்து காலை 10.30 க்கு பொன்னேரிக்கும், பகல் 1.35 மணிக்கு பொன்னேரிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 12.18 மணிக்கு மூா்மாா்க்கெட்டுக்கும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொற்களால் முடியாதபோது மௌனம் பேசும்... அபர்ணா தீட்சித்!

பாடவா உன் பாடலை... சர்குண் மேத்தா!

இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை!

சேலை சீசன்... ஜாஸ்மின் வாலியா!

கலந்துகட்டிய பொருத்தம்... கரீனா கபூர்!

SCROLL FOR NEXT