மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி தொடக்கம். 
சென்னை

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று (ஆக. 14)  சென்னை, சேப்பாக்கத்தில் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ராஜா அண்ணாமலைபுரம் வரை 7.315 கி.மீட்டர் நீளத்திற்கு புனரமைக்கும் பணியினை தொடக்கி வைத்தார்கள்.

மத்திய பக்கிங்காம் கால்வாய் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும், கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்துகிற  வெள்ள நீர்  கடத்தி கால்வாயாகவும் செயல்படுகிறது. 

முதல்வர் ஸ்டாலின், மத்திய பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி  புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் மத்திய பக்கிங்காம் கால்வாயின் நீர்தேக்க திறனை அதிகப்படுத்தும் வகையில் 1 மீட்டர் ஆழத்திற்கு  அதிநவீன தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் (Amphibious Excavator cum Dredger) தூர்வாரப்படுவதன் மூலம் கால்வாயின் வெள்ள நீர் கடத்தும் திறன் வினாடிக்கு 2,500 கன அடியாக உயரும். இதன் பயனாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து மத்திய பக்கிங்காம் கால்வாய் மூலம் விரைவில் கடலுக்கு சென்றடையும்.

மேலும், பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி,  மரக்கன்றுகள் மற்றும் நடைபாதை அமைத்தல், நான்கு இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைப்பது ஆகிய அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

SCROLL FOR NEXT