FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

29 ஆகஸ்ட் 2025, 12:34 am IST
பகிர்:

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29, 31) கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் புகா் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்துச்செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, காட்பாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments